குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல்இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். உங்களுக்கும் நடக்கலாம். நீங்கள் ஒரு பார்ட்டிக்குப் போகிறீர்கள், நண்பர்களை சந்திக்கிறீர்கள், சிரிக்கிறீர்கள், மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறீர்கள். இப்போது வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் தடுமாறிக் கொண்டே உங்கள் காரில் ஏறி, ஓட்டுகிறீர்கள்.

நீங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது?

உங்களுக்கு காயம்படுவதற்கு நீங்கல் குடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நிதானமாகச் செல்லலாம், ஆனால் உங்களை நோக்கிவரும் ஓட்டுநர் உங்களை வந்து மோதலாம். உங்களுடைய உயிரையும் மற்றவர்களின் உயிரையும் காப்பாற்ற நீங்கள் இவ்வாறு செய்யலாம்:

  • சாப்பிட்டுக்கொண்டு ஓட்டுங்கள், சிரித்துக்கொண்டு ஓட்டுங்கள், பேசிக்கொண்டு ஓட்டுங்கள். ஆனால், எது எப்படி இருந்தாலும் குடித்துவிட்டு மட்டும் ஓட்டாதீர்கள்.
  • குடித்திருப்பவருடன் எப்போதும் பயணம் செய்யாதீர்கள்.
  • நீங்கள் சிறிதளவு குடித்திருந்தாலும் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எப்போதும் ஒரு டேக்சியை அழையுங்கள்.
  • உங்கள் நண்பர்களோ, சக பணியாளர்களோ குடித்திருந்தால் அவர்களை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்காதீர்கள்.
  • நீங்கள் வெளியூர் சுற்றுலாவுக்கு ஒரு குழுவாகச் சென்றிருக்கிறீர்கள். ஒரு நபரை மது அருந்தாமல் இருக்கச் செய்துவிட்டு, அவரை வாகனத்தை ஓட்டச் சொல்லுங்கள்.
  • ஒரு பார்ட்டிக்குச் சென்றால், உங்களை வீட்டிற்குத் திருப்பி அழைத்துச் செல்ல ஒரு நபரை (மது அருந்தாதவர்) முன்பே நிர்ணயித்திடுங்கள்.
  • பொறுப்புடன் நடந்துக் கொள்ளுங்கள் – நீங்கள் மற்றவர்களை அழைத்து, மதுவை பரிமாறினால், அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்வதை உறுதி செய்யுங்கள்.
  • வேறு வழியே இல்லை, நீங்கள்தான் வாகனத்தை ஓட்டியாக வேண்டும் என்கிற நிலையில் இருந்தால், மதுவே இல்லாத பீர்கள், மாக்டெய்ல் அல்லது சாதாரண குளிர்பானங்களை மட்டும் அருந்துங்கள்.
  • இரவில் வெளியே செல்லும்போதெல்லாம் பாருக்கோ அல்லது பப்பிற்கோதான் செல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை. ரெஸ்டாரன்டில் ஒரு டேபிளை புக் செய்யுங்கள், ஹைவேயில் உள்ள தாபாவிற்கு வாகனத்தை ஓட்டிச் செல்லுங்கள் அல்லது உங்கள் நகரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஃபுட் ட்ரக்கில் சாப்பிட்டுப் பாருங்கள்!

Please select the social network you want to share this page with: