குறிப்பிட்ட வயதை அடையாதவர்கள் மது அருந்துதல்

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். உங்களுக்கும் நடக்கலாம். நீங்கள் ஒரு பார்ட்டிக்குப் போகிறீர்கள், நண்பர்களை சந்திக்கிறீர்கள், சிரிக்கிறீர்கள், மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறீர்கள். இப்போது வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் தடுமாறிக் கொண்டே உங்கள் காரில் ஏறி, ஓட்டுகிறீர்கள்.

Please select the social network you want to share this page with:

பதின்வயதினர் ஏன் மது அருந்துகின்றனர்?

Posted by / in குறிப்பிட்ட வயதை அடையாதவர்கள் மது அருந்துதல் / No comments yet

குறிப்பிட்ட வயதிற்குள் இருப்பவர்கள் மது அருந்துதல் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது என்று பண்பறி ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மது என்பது சமூக அமைப்புகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல்வேறு பங்கினை வகிக்கக்கூடும். ‘பெரியவர்களைப்’ போல் நடந்துக் கொள்கிறார்களா என்பது மட்டும் கேள்வியல்ல.

ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தைகள் ஏன் மது அருந்துகிறார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே நியாயமான தேர்வுகளை செய்ய உங்கள் குழந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

குழந்தைகள் முதல் முறை மது அருந்தும்போது வெறுப்பான அனுபவத்தைக் கொண்டிருந்தாலும் மது அவர்களை இழுத்துவிடும். அவர்களுக்கு அதன் சுவையோ, அது அவர்களை உணரச்செய்யும் விதமோ பிடிக்காமல் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பல சமயங்களில் இதில் பிடிவாதமாய் இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட வயதிற்குள் குடிப்பதன் அபாயங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் மதுவினால் ஏற்படும் விளைவுகளையும், மக்கள் ஏன் குடிக்கிறார்கள் என்கிற விஷயங்களிலும் முதலில் கவனம் செலுத்தவில்லை என்றால் அவர்கள் நீங்கள் கூறுவதை கேட்கவோ நம்பவோ மாட்டார்கள்.

அபாயத்தை சந்திக்கும் விருப்பம்—மூளை, இருபதுகளில் நன்றாக வளர்ச்சியடைய துவங்கும் என்பதை காட்டுகிறது. இந்த தருணத்தில் இது முக்கியமான கருத்துப்பரிமாற்ற தொடர்புகளை உருவாக்க துவங்கும் மற்றும் அதன் செயல்பாட்டை சீர்திருத்தும். இந்த நீளமான வளர்ச்சி காலம் புதிய மற்றும் சாத்தியமான அபாயகரமான சூழ்நிலைகளை சந்திப்பதற்கான விருப்பம் ஆகியவை இளம்வயதினரின் குணங்களான சில நடத்தையை விவரிக்க உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பதின்வயதினர் சிலருக்கு, அபாயகரமான சூழ்நிலைகளை சந்திக்கும் குறுகுறுப்பு மதுவை பயன்படுத்தி பார்க்கவும் வைக்கிறது. குடித்தல் போன்ற அவர்களின் நடவடிக்கைகள் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல சமயங்களில் உணராமல் ஏன் மிகவும் துணிச்சலாக செயல்படுகின்றனர் என்பதற்கு சாத்தியமான உளவியல்சார் விளக்கத்தை வளர்ச்சிசார் மாற்றங்களும் வழங்குகின்றன.

எதிர்பார்ப்புகள்—மக்கள் மதுவை எப்படி பார்க்கின்றனர், அவற்றின் தாக்கங்கள் ஆகியவை அவர்களின் குடிப்பழக்கத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும். இதில் அவர்கள் எப்போது குடிக்க துவங்குகிறார்கள் மற்றும் எப்படி குடிக்கிறார்கள் என்பதும் அடங்கும். குடிப்பது மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கும் இளம்வயதினர் அப்படி நினைக்காதவர்களைவிட அதிகமாகக் குடிப்பதற்கு சாத்தியம் உள்ளது. எதிர்பார்ப்புகள் எப்படி குழந்தைப்பருவத்திலிருந்து இளம்வயதிற்கும், அதிலிருந்து பெரியவனாகும் வரையிலான குடித்தல் பாங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் கவனம் செலுத்துகிறது. மது பற்றிய நம்பிக்கை, குழந்தை ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல துவங்குவதற்கு முன் வாழ்வில் மிக ஆரம்பத்திலேயே துவங்கிவிடுகிறது. 

மதுவிற்கு எளிதில் வயப்படல் மற்றும் போதையைத் தாங்கும் திறன்—பெரியவர்களின் மூளைக்கும் முதிர்ச்சியடைந்துவரும் பதின்வயதினரின் மூளைக்குக்குமிடையே உள்ள வித்தியாசங்கள் இளம் குடிகாரர்களால் ஏன் பெரியவர்களைவிட அதிகளவு குடிக்க முடிகிறது என்பதைத் தெரிவித்துவிடும். மயக்கம், ஒருங்கிணைவின்மை, மற்றும் போதைத் தெளிய துவங்கும்போது ஏற்படும் தாக்கங்கள் போன்ற மதுவின் எதிர்மறை விளைவுகளை விவரித்துவிடும். வழக்கத்திற்கு மாறான இந்த போதையைத் தாங்கும் திறன் இளைஞர்கள் மத்தியில் அளவுக்கு மீறி குடித்தலின் விகிதத்தை அதிகரிக்கிறது.அதே நேரம், இளம் வயதைச் சேர்ந்தவர்கள் சமூக சூழ்நிலைகளில் செளகரியமாக உணர்வது போன்ற குடித்தலின் நேர்மறைத்தாக்கங்களால் குறிப்பாக எளிதில் வயப்படுவதாகத் தெரிகிறது. இளைஞர்கள் இத்தகைய நேர்மறையான சமூக அனுபவங்களால் பெரியவர்களைவிட அதிகமாகக் குடிக்கக்கூடும்.

 

ஆளுமை இயல்புகள் மற்றும் மனநலம் சார்ந்த கமார்பிடிட்டி   மிகவும் சிறு வயதிலேயே குடிக்க துவங்கும் குழந்தைகள் குடிக்க துவங்குவதை சாத்தியமாக்கக்கூடிய ஒரேவிதமான ஆளுமை இயல்புகளைப் பல சமயங்களில் கொண்டிருப்பார்கள். பாதகம் விளைவிக்கும், அதீத இயக்கத்தைக் கொண்டிருக்கும் மற்றும் பிடிவாதமான குழந்தைகள், இவர்களுடன் மந்தமான, மற்றவர்களுடன் இணைந்துப் பழகும் இயல்பில்லாத, அல்லது கவலையாக இருப்பவர்கள் நடத்தைசார் பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மதுசார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான அதிக அபாயத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. மது பயன்பாட்டுடன் தொடர்புடைய மற்ற நடத்தைசார் பிரச்னைகளில் கீழ்ப்படியாமல் இருப்பது, தீங்கு அல்லது தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதில் சிரமம், மற்ற குணங்களும் சிறுவர்களிடம் காணப்படுகிறது. இவர்கள் எந்த விதிகளும் இல்லாமல் அல்லது மற்றவர்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படுவார்கள். (மருத்துவ துறையில், கமார்பிடிட்டி  என்பது ஒன்று அல்லது அதற்கு அதிகமான கூடுதல் குறைபாடுகள் (அல்லது நோய்கள்) முதன்மை நோய் அல்லது குறைபாடுடன் ஏற்படுவது; அல்லது இது போன்ற கூடுதல் குறைபாடுகள் அல்லது நோய்களின் விளைவாகும். கூடுதல் குறைபாடு நடத்தைசார் அல்லது மனநலம்சார் குறைபாடாகவும் இருக்கக்கூடும்) 

மரபுவழிக் காரணிகள்ஒரு நபருக்கு ஏற்படக்கூடிய மதுசார்ந்த பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யும் சில நடத்தைசார் மற்றும் உளவியல்சார் காரணிகள் நேரடியாக மரபியலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இதில் எளிதில் போதை ஏறாமல் இருப்பது ஆகியவையும் அடங்கும். உதாரணத்திற்கு ஒரு குடிகாரனின் குழந்தையாக இருப்பதால் அல்லது குடும்ப உறுப்பினர்களில் பலர் குடிகாரன்களாக இருப்பதால் அந்த குழந்தைக்கு மதுசார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருக்கும். குடிகாரன்களை நெருங்கிய உறவினர்களாகக் கொண்டிராத குழந்தைகளைவிட குடிகாரன்களின் குழந்தைகள் குடிகாரன்களாக மாறுவதற்கு 4 முதல் 10 மடங்கு அதிக சாத்தியம் உள்ளது. குடிகாரன்களின் குழந்தைகள் இளம் வயதிலேயே குடிக்க துவங்குவதற்கும், குடிப்பதனால் ஏற்படக் கூடிய பிரச்னைகளை மிக விரைவாக அனுபவிப்பதற்கும் அதிக சாத்தியம் உள்ளது.

 

 

Please select the social network you want to share this page with: