அளவுக்கு மீறி மது அருந்துதல்

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். உங்களுக்கும் நடக்கலாம். நீங்கள் ஒரு பார்ட்டிக்குப் போகிறீர்கள், நண்பர்களை சந்திக்கிறீர்கள், சிரிக்கிறீர்கள், மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறீர்கள். இப்போது வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் தடுமாறிக் கொண்டே உங்கள் காரில் ஏறி, ஓட்டுகிறீர்கள்.

26

Aug 2015

அளவுக்கு மீறி மது அருந்துதலின் தாக்கங்கள் என்ன?

Posted by / in அளவுக்கு மீறி மது அருந்துதல் / No comments yet

குடிப்பது உங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்:

  • மது அருந்துவது உங்களைத் தள்ளாடச் செய்து, ஒருங்கிணைப்பை பாதிக்கும். எனவே, விபத்துக்களும், கீழே விழுவதும் சாதாரணமாக நிகழும்.
  • அளவுக்கு மீறி குடிப்பது உங்களின் மனநிலையையும் உங்கள் ஞாபகசக்தியையும் பாதிக்கும். நீண்ட காலத்தில் இது கடுமையான மனநல பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

மிகவும் பரவலாக, அளவுக்கு மீறி குடிப்பது சமூக விரோதம், பகைமை உணர்வு மற்றும் வன்முறை நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடும்.

Please select the social network you want to share this page with:

14

Aug 2015

அளவுக்கு மீறி குடிப்பதை நான் எப்படி தவிர்ப்பது?

Posted by / in அளவுக்கு மீறி மது அருந்துதல் / No comments yet

அளவுக்கு மீறி குடிப்பதைத் தவிர்க்க தனிப்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்:

  1. அளவுக்கு மீறி குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துக் கொள்ளுங்கள். அளவுக்கு மீறி குடித்தல் தொடர்பான பிரச்னைகளைத் தெரிந்துக் கொள்வது, அளவுக்கு மீறி குடித்தலை சமாளிப்பதற்கான தெளிவான முடிவை எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  2. அளவுக்கு மீறி குடிப்பதற்கான சூழ்நிலைகளையும் சாத்தியமான தூண்டுதல்களையும் தவிர்த்திடுங்கள். பார்ட்டிகளில் மது அருந்துவதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால், அத்தகைய பார்ட்டிகளிலிருந்துத் தள்ளி இருங்கள். மது அருந்தும் போட்டிகள் அல்லது விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தவிர்த்திடுங்கள்.
  3. ஸ்டாண்டர்ட் ட்ரிங் என்றால் என்னவென்று புரிந்துக் கொள்ளுங்கள். பல சமயங்களில், பரிமாறப்படும் அளவு பரிந்துரைக்கப்பட்ட பரிமாறும் அளவைவிட அதிகமாக இருக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
  4. மெதுவாக அருந்துங்கள். ஒரு நேரத்தில் உங்கள் பானத்தில் சிறிதளவு மட்டுமே உறிஞ்சுங்கள். ஒரு மணிநேரத்தில் பல மது பானங்களைக் குடிக்காதீர்கள். நீங்கள் கடைசி வாய் குடித்த பிறகு 90 நிமிடங்களுக்கு மேல் உங்கள் உடல் மதுவை உறிஞ்சிக் கொள்ளும். உங்களின் உடல் உடனடியாக எப்படி பாதிப்படையும் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம்.
  5. சோடா அல்லது போதை தராத மற்ற பானங்களைக் அருந்துங்கள்.மனதில் இதே போன்ற மது அருந்தும் வரம்புகளை வைத்திருக்கும் நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள். ஒரு சூழ்நிலைக்கு நண்பர்கள் நிறைய நெருக்கடியை அளிப்பார்கள். உங்களின் வரம்புகளை மதிக்கும், அளவுக்கு மீறி குடிக்கக் கூடாது என்று நினைக்கும் நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்.
  6. அல்கோபாப்களிலிருந்து தள்ளி இருங்கள். அல்கோபாப்களில் அதிகளவு சர்க்கரை இருக்கும். எனவே அவை வழக்கமான சோடாவை போன்ற சுவையைக் கொண்டிருக்கும். சிறிது நேரத்திலேயே இதனை எளிதாக அதிகளவில் குடித்துவிடலாம்.
  7. சமூகரீதியாக மனமகிழ்ச்சியை தருவதாக தவறாக நம்பப்படும் மது, போட்டி போட்டு குடிக்கப்பட வேண்டிய பானமோ, நீங்கள் வீரமானவர் என்று காட்டிக் கொள்வதற்கான வழியோ அல்ல.
  8. அதிக விழிப்புணர்வு மற்றும் அளவுக்கு மீறி குடித்தலால் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துக் கொள்வது தடுமாறும் சமுதாயம் ஆரோக்கியமான நடத்தைகளை பின்பற்ற உதவும். பெற்றோரும் பெரியவர்கள் அளவுக்கு மீறி குடித்தலால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் பற்றி குழந்தைகளிடமும் அவர்களின் சமுதாயத்திடமும் பேசுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

 

Please select the social network you want to share this page with: