
14
Aug 2015மதுவை சார்ந்திருத்தலின் அறிகுறிகள் யாவை?
Posted by Responsible Consumption / in மதுவிற்கு அடிமையாதலை கட்டுப்படுத்துதல் / No comments yet
மதுவிற்கு அடிமையாதல் மற்றும் மதுவை தவறாகப் பயன்படுத்துதல் இரண்டும் ஒன்றுதான். ஆனால் பல சமயம் அதன் தீவிரத்தில்தான் வித்தியாசம் இருக்கும்.
மதுவிற்கு அடிமையாதல் மற்றும் மதுவினைத் தவறாகப் பயன்படுத்துதலின் அறிகுறிகளில் இவை அடங்கும்:
- தனியாகக் குடித்தல்.
- இரகசியமாகக் குடித்தல்.
- எவ்வளவு மது அருந்தப்படுகிறது என்பதை கட்டுப்படுத்த முடியாமல் இருத்தல்.
- திடீரென்று சுய நினைவை இழத்தல் – நிறைய நேரத்தை நினைவு வைத்துக் கொள்ளாமல் இருத்தல்
- வழக்கங்களைக் கொண்டிருத்தல். இந்த வழக்கங்கள் பாதிக்கப்பட்டால் அல்லது தவறாகப் பேசப்பட்டால் எரிச்சலடைதல். உணவிற்கு முன்/உணவின் போது/ உணவிற்கு பிறகு, அல்லது வேலையை முடித்த பிறகு குடிப்பதாக இருக்கலாம்.
- ஒரு நபருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளையும் செயல்பாடுகளையும் கைவிடுதல்; அவற்றில் தனக்குள்ள ஆர்வத்தை இழத்தல்.
- குடிப்பதற்கு தூண்டும் உணர்வைக் கொண்டிருத்தல்.
- குடிக்கும் நேரம் வந்துவிட்டால் எரிச்சலடைதல். மது கிடைக்கவில்லை என்றால் அல்லது அது கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தால் இந்த உணர்வு மிகவும் தீவிரமாகும்,
- வைக்கக்கூடாத இடங்களில் எல்லாமல் மதுவை பிறகு பயன்படுத்துவதற்காக எடுத்துவைத்தல்.
- குடிக்க வேண்டும், நன்றாக உணர வேண்டும் என்பதற்காக ஒரே மடக்கில் குடிப்பது.
- உறவுசார்ந்த பிரச்னைகளைக் கொண்டிருத்தல் (குடிப்பதால் உண்டாவது).
- சட்ட பிரச்னைகளைக் கொண்டிருத்தல் (குடிப்பதால் ஏற்படுவது).
- வேலை பிரச்னைகளைக் கொண்டிருத்தல் (குடியால் உண்டாவது, அல்லது குடி அடிப்படை காரணமாக இருப்பது).
- பல பிரச்னைகளைக் கொண்டிருத்தல் (குடியினால் உண்டாவது).
- குடியின் தாக்கத்தை உணர அதிகளவு மது தேவைப்படுதல்.
- குடிக்காத போது குமட்டல், வியர்வை, அல்லது நடுக்கம் ஏற்படுதல்.
மதுவைத் தவறாகப் பயன்படுத்தும் நபர் பல அறிகுறிகளைக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் போதைக்கு அடிமையானவர்களைப் போன்ற குடியைவிடும்போது ஏற்படும் அறிகுறிகள் அல்லது குடித்தே ஆக வேண்டும் என்கிற அதே அளவு கட்டாயம் ஆகியவற்றை கொண்டிருக்க மாட்டார்கள்.
மதுவை சார்ந்திருத்தல் தொடர்பான பிரச்னைகள் தீவிரமானவை. இவை ஒரு நபரை உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக மற்றும் சமூகரீதியாக பாதிக்கும். குடி பிரச்னையைக் கொண்டிருக்கும் நபருக்கு குடித்தல் என்பது கட்டாயமாகிவிடும் – மற்ற அனைத்து செயல்பாடுகளைவிடவும் இது முக்கியத்துவத்தைப் பெறும். பல ஆண்டுகளானாலும் இது கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.