குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல்

கட்டுரைகள் திரும்ப இங்கே கிளிக் செய்யவும்

Untitled-1

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். உங்களுக்கும் நடக்கலாம். நீங்கள் ஒரு பார்ட்டிக்குப் போகிறீர்கள், நண்பர்களை சந்திக்கிறீர்கள், சிரிக்கிறீர்கள், மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறீர்கள். இப்போது வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் தடுமாறிக் கொண்டே உங்கள் காரில் ஏறி, ஓட்டுகிறீர்கள். உங்களுக்கு நீங்களே நான் அதிகமாகக் குடிக்கவில்லை என்று கூறிக் கொள்கிறீர்கள். நீங்கள் சிறிதளவே குடித்திருக்கலாம். நீங்கள் குடித்திருப்பதைவிட அதிகமாக குடித்தால்தான் போதை தலைக்கேறும் என்று நீங்கள் நினைக்கலாம்.

நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு.

பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதற்குத் தேவையான உங்களின் ஆழமான உணர்வு, முடிவெடுக்கும் திறன், இவற்றுடன் அத்தியாவசிய நுண் அசைவுத் திறன்கள் ஆகியவற்றையும் மது பாதிக்கும். நீங்கள் வழக்கம்போல் வாகனத்தை ஓட்டாதபோதும் நீங்கள் வழக்கம்போல்தான் வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என்று மிகவும் எளிதாக நினைத்துவிடுவீர்கள்.

இதனை கருத்தில் கொள்ளுங்கள்:

*இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பார்ட்டிக்குச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் இங்குதான் வசிக்கின்றனர்.

* கடந்த ஐந்து ஆண்டுகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது போடப்பட்டுள்ள குற்றவழக்கு விகிதம் 16 மடங்கு அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுவாச பகுப்பாய்வுக் கருவியுடன் (ப்ரெத் அனலைஸர்) போலீஸ் குழு உங்களை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாக உள்ளது.

* சாலை விபத்துக்களில் மரணம் ஏற்படுவதற்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்செயலாக, இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்குமென்று ஊகிக்கப்படுகிறது.